தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சி.எம்.விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சிப் பணிகளை தொய்வின்றி கொண்டு செல்லவும், அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் இந்த புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிர்வாகப் பிரிவுகளுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் விவரமும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட காஞ்சி தெற்கு மாவட்டத்திற்கு முனிரத்தினம் MLA , திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டத்திற்கு அபிஷேக் MLA, நெல்லை வடக்கு மாவட்டத்திற்கு முருகன்  MLA ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நெல்லை தென்கிழக்கு மாவட்டத்திற்கு ரெட்டியார்பட்டி நாராயணன் MLA மற்றும் நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளராக மரியா ஜாண் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 5 புதிய மாவட்டங்களின் உருவாக்கத்தின் மூலம், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களின் (மா.செ.) மொத்த எண்ணிக்கை தற்போது 136-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.