திமுக கூட்டணிக்குள் நாளுக்கு நாள் மோதல்கள் வலுத்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போதைய திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்தும், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் தாக்கம் குறித்தும் பேசியுள்ள பேச்சு ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் உலுக்கியெடுத்துள்ளது. “திமுக ஆட்சியில் ஊழல் என்பது கொடிகட்டிப் பறந்தது; ஆனால், தற்போது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அந்த ஊழல் ஆட்டத்தை அவர் இல்லாமல் ஆக்கியுள்ளார், திமுகவை அடக்கி வைத்துள்ளார்” என்று வைகோ விஜய்க்கு ஆதரவாகப் பகிரங்கமாக முழங்கியுள்ளார்.
மேலும், “திமுக கூட்டணியில் நீடித்தபோது இந்த ஊழல்களைப் பற்றி ஏன் பேசவில்லை?” என்று எழும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், “நாங்கள் மட்டும் அப்போதே பேசியிருந்தால், அடுத்த நாளே எங்களைக் கூட்டணியை விட்டு வெளியேற்றியிருப்பார்கள்” என்று திமுகவின் சர்வாதிகாரப் போக்கை அம்பலப்படுத்தியுள்ளார். “ஒருவேளை நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்றுக்கூட்டணிக்குச் சென்றிருந்தாலும், சுயநலவாதிகள் என்று எங்களைத்தான் விமர்சித்திருப்பார்கள்” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ள வைகோவின் இந்த அதிரடிப் பேச்சு, திமுக – மதிமுக கூட்டணியின் இறுதிநாட்கள் நெருங்கிவிட்டதை உணர்த்துவது போல் இருப்பதாக சோஷியல் மீடியாக்களில் கிரிஸ்பியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
