உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி (Semri) சுங்கச்சாவடியில் இன்று (ஜனவரி 18) காலை நெஞ்சை உறைய வைக்கும் விபத்து ஒன்று நடந்துள்ளது.
சுங்கச்சாவடியில் கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் கார்கள் மீது மோதியது.
यूपी | झांसी में टोल प्लाजा पर खड़ी कार को ट्रक ने टक्कर मारकर टोलकर्मी को बोनट पर लटका दिया, पूरा Video देखिए… pic.twitter.com/6gw2xkvAEt
— Sachin Gupta (@SachinGuptaUP) January 18, 2026
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோவில், சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் வரிசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த லாரி மோதிய வேகத்தில் அவர் அந்த லாரியின் முன்பக்க ‘போனட்’ (Bonnet) மீது தூக்கி வீசப்படுகிறார்.
லாரி நின்ற பிறகும் அவர் அப்படியே அந்த போனட்டில் தொங்கிக் கொண்டிருப்பது காண்போரை அதிர வைக்கிறது. இந்த மோதலில் பல கார்கள் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் ஜான்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
