மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வியட்நாம் நாட்டில் முதல்முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட உறுப்பைப் பயன்படுத்தி இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்த நாட்டின் மருத்துவ வரலாற்றில் இது ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குள்ளான 43 வயது நோயாளியின் உடல்நிலை தற்போது சீராகி வருவதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் காயங்கள் நன்றாக ஆறி வருவதாகவும், அவர் உடல்ரீதியாகத் தேறி வருவதாகவும் மருத்துவக் குழுவினர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

மிகவும் சவாலான இந்த அதிநவீன அறுவை சிகிச்சையை வியட்நாம் நாட்டு மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. உறுப்பு தானத்தின் மகத்துவத்தையும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியையும் இந்தச் சம்பவம் உலகிற்கு மீண்டும் ஒருமுறைப் பறைசாற்றியுள்ளது.