மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தெருநாய் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளது. வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனை நாய் திடீரென கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் குழந்தைக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்தவர்கள் குழந்தையை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A three-year-old child was seriously injured after being attacked by a stray dog in the Bagroja HADCO area of Ahilyanagar city.
The child sustained severe injuries in the attack and is currently undergoing treatment at a hospital.
CCTV footage of the incident has surfaced,… pic.twitter.com/eev8thPlTM
— Hate Detector 🔍 (@HateDetectors) July 29, 2026
“>
இந்தச் சம்பவம் அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
