இந்தியாவின் ஐடி தலைநகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சாலை வன்முறை (Road Rage) சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16 அன்று, நெக்ஸஸ் சாந்திநிகேதன் மால் அருகே உள்ள சிக்னலில் ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் செல்லும் ஒரு நபர், தனது பேண்ட்டின் பின்புறம் ஒரு பெரிய கத்தியைச் செருகி வைத்துள்ளார்.

சிக்னலில் நின்றபோது, பின்னால் இருந்த கார் ஓட்டுநரை நோக்கித் திரும்பிய அந்த நபர், திடீரென கத்தியை உருவி, “சத்தம் போடாதே!” (Awaj Nhi Karna) என மிரட்டல் விடுத்தார்.

மேலும் கார் ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டிய அவர், சிக்னல் விழுந்ததும் அங்கிருந்து மிகவும் ஆபத்தான முறையில் வளைந்து நெளிந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். இதனை காரில் இருந்த டேஷ்போர்டு கேமரா (Dashcam) கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது.