அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில், ஃபிபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) தொடரின் மிக முக்கியமான பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கவனமும் மைதானத்தை விட்டு, பிரேசில் நாட்டைச் சேர்ந்த வோ பஹியானா (Vo Bahiana) என்ற பெண் சாமியாரின் வினோதமான ஏலியன் கணிப்பு பக்கம் திரும்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸைக் கொண்டுள்ள இவர், கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், உலகக்கோப்பை மேட்ச் நடக்கும்போது வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) மைதானத்தை ஆக்கிரமிக்கப் போவதாகக் கூறி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்தத் திகில் வீடியோவில், மியாமி ஃபுட்பால் மைதானத்திற்கு மேலே திடீரென பறக்கும் தட்டுகள் (UFOs) வந்து வட்டமடிக்கும் என்றும், அதிலிருந்து இறங்கும் ஏலியன்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் மற்றும் அங்கிருக்கும் ரசிகர்களை அலாக்காகக் கடத்திச் செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
A Brazilian psychic has made a wild prediction, claiming that aliens will invade the World Cup and abduct hundreds of fans live during a match. pic.twitter.com/vA01xs6WNq
— ProfNet Media (@ProfNetMedia) June 24, 2026
முதலில் வரும் விண்கலம் வீரர்களைக் கடத்திய பின், ‘மதர்ஷிப்’ எனப்படும் ராட்சத விண்கலம் வந்து மெக்கானிக்கல் கைகள் மூலமாக ஆயிரக்கணக்கான ரசிகர்களைத் தூக்கிச் செல்லும் என்றும், அங்கு மக்களின் கதறலும் அழுகுரலும் மட்டுமே கேட்கும் என்றும் அவர் பயத்துடன் விவரித்துள்ளார். வரும் 24-ம் தேதி இந்த மேட்ச்சில் ஏதேனும் விபரீதம் நடக்கலாம் என அவர் கூறியுள்ள இந்த வீடியோ, இணையதளத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
