இன்றைய நவீன காலத்தில் போர் என்பது போர்க்களத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை; சமூக ஊடகங்களும் போலிச் செய்திகளுமே நாட்டின் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளன. இந்தியாவில் உள்ள ஒரு அநாமதேய சமூக ஊடகக் கணக்கிலிருந்து பரவிய ஒரு போலி செய்தி, உலக எல்லைகளைக் கடந்து இஸ்ரேல் பிரதமர் வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்திய விசித்திரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5 அன்று, இந்தியாவில் இருந்து இயங்கும் ஒரு எக்ஸ் (X) கணக்கில், ஈரானின் மூத்த தளபதி அஹ்மத் வாஹிதி கூறியதாக ஒரு போலி செய்தி வெளியிடப்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை ஈரானும் அணு ஆயுதத் தேடலைக் கைவிடாது என அவர் கூறியதாகப் பதிவிடப்பட்டது. மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்த, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அணு குண்டு வெடிப்புப் படமும் இதனுடன் இணைக்கப்பட்டது.
இந்தப் போலிப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேலின் பிரபல செய்திச் சேனலான ‘சேனல் 14’ இதை உண்மையான செய்தி என ஒளிபரப்பியது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகுவும் இந்தச் செய்தியைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரவலாகப் பகிர்ந்தார்.
இச்செய்தி பரவிய சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஈரானின் அணுசக்தி நோக்கத்திற்கு ஆதாரமாக இந்த போலி அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசினார். இதைப் பின்பற்றி, அமெரிக்காவின் முன்னாள் தூதர் மைக் வால்ட்ஸ், அமெரிக்க செனட்டர் ரிக் ஸ்காட் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற முன்னணி அமெரிக்க ஊடகங்களும் இந்தச் செய்தியை உண்மை என நம்பிப் பகிரத் தொடங்கின.
BREAKING 🚨:
दुनिया में बढ़ते तनाव के बीच iran की बड़ी चेतावनी!IRGC Chief Ahmad Vahidi का बड़ा बयान—
“जब तक US और Israel के पास nuclear weapons हैं, तब तक Enriched Uranium या nuclear weapons पर कोई बातचीत नहीं होगी।”
उन्होंने साफ किया कि iran अपनी National Security के लिए इस… pic.twitter.com/y4M7aKTZ3e
— Ritika (@Im_Ritikaa) August 5, 2026
“>
ஆனால், இச்செய்தி குறித்த சர்ச்சைகள் எழுந்ததும், அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் அமைதியாகத் தனது பதிவை நீக்கினார். ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்ததோடு, தங்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்றும் விளக்கியது. சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் ஏஐ படங்கள், உலக நாடுகளின் உயர்மட்ட அரசியல் முடிவுகளையே எவ்வளவு எளிதாகத் திசைதிருப்ப முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாகும்.
