வெனிசுலா நாட்டின் வடக்கு பகுதியில் அடுத்தடுத்து ஒரு நிமிட இடைவெளியில் தாக்கிய 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ளன. இந்த பயங்கர இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 235-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
🚨 HEARTBREAKING MIRACLE IN VENEZUELA
A child, pulled ALIVE from the rubble after the devastating 7.5 quake… covered in dust but breathing.
In the middle of total destruction in Catia La Mar, this is the hope we needed.
Pray for the missing. Pray for the families.… pic.twitter.com/to1eB2X08P
— Amar Singh Chouhan (@amar_4inc) June 25, 2026
நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக விளங்கும் லாகுவைரா (La Guaira) பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகியுள்ளதால், அவர்களை மீட்க தீயணைப்பு படை, போலீசார் மற்றும் ராணுவத்தினர் 24 மணி நேரமும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்த கோர விபத்திற்கு மத்தியிலும் அங்கு நடந்த சில அற்புதங்கள் மீட்புக் குழுவினருக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளன.
Rescue teams are also saving pets that are under the rubble from the earthquake that hit Venezuela 😭🐕 pic.twitter.com/84jjEJ1z6d
— Volcaholic 🌋 (@volcaholic1) June 25, 2026
இடிந்து விழுந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அடியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று எவ்வித காயமும் இன்றி உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதேபோல், பல மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 வயது சிறுவன் ஒருவனும், ஒரு செல்லப் பிராணி நாயும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Los funcionarios del Cuerpo de Policía Nacional Bolivariana junto a organismos de seguridad rescataron a un bebe en el estado La Guaira. pic.twitter.com/6XAO30vWno
— Jhannely González | Periodista (@gazareportes_ve) June 26, 2026
இன்னும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து கிடப்பதால், தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) மீட்புப் பணிகளை வேகப்படுத்த கனரக வாகனங்களை உடனடியாகக் களமிறக்க உத்தரவிட்டுள்ளார். அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் மீட்புப்பணிகள் ராணுவக் கட்டுப்பாட்டில் அதிரடியாக நடந்து வருகின்றன.
