கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பலூனில் காற்று நிரப்பப் பயன்படும் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவிழா நேரத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.