தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மிக முக்கியமான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் சோசியல் மீடியா பக்கங்களிலும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் மெகா வரவேற்பையுமே கிளப்பியுள்ளது.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மூலம் அரசாணை எண் 106-ன் படி, வரும் 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக (Pongal Festival) ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளை உற்பத்தி செய்யும் பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு தற்பொழுது நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மெகா உற்பத்திப் பணிகளை எவ்வித தொய்வும் இன்றி உடனடியாகத் தொடங்குவதற்காக, முன்பணமாகச் (Advance) சுமார் 300 கோடி ரூபாய் (ரூபாய் முந்நூறு கோடி மட்டும்) நிதி ஒப்படைப்பு செய்து அரசு அதிகாரப்பூர்வமாக ஆணை பிறப்பித்துள்ளது.
தற்பொழுது வெளியாகியுள்ள இந்த ஹாட் செய்தி சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி, “பொங்கல் பண்டிகைக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிற நிலையில, இப்பவே ப்ளான் பண்ணி 300 கோடி ரூபாயை ஒதுக்குனது நிஜமாவே ஒரு மாஸ் மூவ் .. இதன் மூலமா நெசவாளர்களுக்கும் முன்கூட்டியே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கு!” என்று நெட்டிசன்கள் மத்தியில் இணையத்தில் அள்ளிக்கொட்டும் பாராட்டுகளுடன் இந்த நியூஸ் தாறுமாறாக விவாதிக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.
