இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல், மிக இளம் வயதினரையும் குறிவைத்து தாக்கும் மாரடைப்பு (Sudden Heart Failure) சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த சமூகத்தையுமே பயத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கும் விதமாக ஒரு நெஞ்சை நசுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்கு படித்து வந்த 20 வயது இளம் கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி மேடையில் ஏறி மிக உற்சாகமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். தனது சொந்த மொழியில் மிக அழகாக, கலகலப்பாகப் பேசிக்கொண்டே, நடுநடுவே ஜோக் அடித்து அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவரோட பேச்சைக் கேட்டு அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்து கொண்டிருந்தது.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அங்கு நடந்த விபரீதத்தை அங்கிருந்த யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பேச்சின் கடைசி ஐந்து நொடிகள் வரும்போது, திடீரென அந்தப் பெண்ணின் முகபாவனை மாறி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர், அடுத்த சில வினாடிகளிலேயே மேடையிலேயே கண் இமைக்கும் நேரத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
A 20-year-old college student from India died after suffering sudden heart failure while delivering a speech
She was laughing, cracking jokes, and engaging with the audience in her native language
Then, everything changed in the final five seconds pic.twitter.com/N2SrXntvz0
— Saffron Sniper (@Saffron_Sniper1) July 2, 2026
கலகலப்பாகத் தொடங்கிய ஒரு நிகழ்ச்சி, கண்ணிமைக்கும் நேரத்தில் மரண வீடாக மாறிய இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “20 வயசுல இப்படியா திடீர்னு ஹார்ட் அட்டாக் வரணும்?” என்று இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இளைஞர்களின் ஆரோக்கியம் குறித்த தங்களது பயத்தையும் கமெண்ட்டுகளில் கொட்டி வருகின்றனர்.
