இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடிப்பான வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் இணைந்து விளையாடுவதால் மிக நெருக்கமான நண்பர்களாக வலம் வருகின்றனர்.

தற்போது நியூசிலாந்து தொடருக்காக இந்தூரில் தங்கியுள்ள இவர்கள், பயிற்சியை முடித்துத் திரும்பும்போது செய்த கலாட்டா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தூரில் நடந்த இறுதிப் பயிற்சிக்குப் பிறகு வீரர்கள் பேருந்தில் ஏறச் சென்றபோது, துருவ் ஜூரல் ஏதோ சொல்லி ஜெய்ஸ்வாலை கிண்டல் செய்துள்ளார்.

இதனால் போலி ஆத்திரமடைந்த ஜெய்ஸ்வால், ஜூரலை அடிக்கக் கையை ஓங்கியுள்ளார். ஆனால், ஜூரல் லாவகமாகத் தப்பித்துச் சிரித்தபடி ஓடினார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், “இவர்களின் நட்பு நிஜமாகவே சூப்பர்” என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்திய அணி வதோதராவில் வென்ற நிலையில், ராஜ்கோட்டில் தோற்றது.

தற்போது தொடரை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று (ஜனவரி 18) மதியம் 1:30 மணிக்குத் தொடங்குகிறது.