இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கவனம் தற்போது கிரிக்கெட்டைத் தாண்டி குடிநீர் பக்கம் திரும்பியுள்ளது. இந்தூரில் சமீபகாலமாக நிலவி வரும் மோசமான குடிநீர் மாசுப் பிரச்சனையைக் கண்டு இந்திய வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்க விரும்பாத இந்திய கேப்டன் சுப்மன் கில், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவீன தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் (Water Purifier) தனது அறைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இயந்திரம் பாட்டில் குடிநீர் மற்றும் ஆர்.ஓ (RO) நீரைக் கூட மீண்டும் ஒருமுறை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்தூரில் மாசடைந்த குடிநீரால் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வீரர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்தத் தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
