இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட இருவர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாலையில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த அவர்களைப் பார்த்த பொதுமக்கள், தொடக்கத்தில் உண்மையான கிரிக்கெட் வீரர்கள்தான் என்று கருதி வியப்படைந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Aviraj Rajpurohit (@aviraaj._)

பின்னர் அவர்கள் இருவரும் வீரர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது தெரிந்ததும் அங்கிருந்தவர்கள் சிரிப்பொலியுடன் அவர்களைக் கவனித்தனர். இது தொடர்பான காணொளியில் தோனியைப் போலவே தோற்றம் கொண்ட நபர் வாகனத்தை ஓட்ட, கோலியைப் போலவே இருக்கும் நபர் பின்னால் அமர்ந்து செல்கிறார். இந்த சுவாரசியமான காட்சியைப் பார்த்த ரசிகர்கள் இதனை இணையத்தில் பகிர்ந்து பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இவர்கள் இருவரும் மீஷோ மற்றும் சரோஜினி மார்க்கெட் பதிப்புகள் என ரசிகர்கள் கிண்டலாகப் பதிவிட்டு வரும் நிலையில், இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.