பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளருமான ஷோயப் அக்தரின் மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர் காலமானார்.

இத்துயரச் செய்தியை முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்தரின் ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தில் பெரும் தூணாக விளங்கி, அவர் சந்தித்த பல்வேறு சர்ச்சைகளின்போதும் அவருக்கு உறுதுணையாக நின்றவர் அவரது மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தனது தாயாரை இழந்த அக்தர், தற்போது தனது வாழ்வில் மிகவும் நெருக்கமான மற்றொரு முக்கிய நபரான மூத்த சகோதரரையும் இழந்து பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளார்.

இக்கடினமான சூழலில் அக்தரின் குடும்பத்தினருக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், விளையாட்டுப் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.