சோஷியல் மீடியாவில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காகப் பலரும் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், குரங்குடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான வீடியோவில், ஒரு குரங்கு அமைதியாகச் சுவர் மீது அமர்ந்திருக்கிறது. அதைப் பார்த்த இளம்பெண், அதன் மிக அருகே சென்று தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார்.

கேமராவைப் பார்த்து ஸ்டைலாக “ஹலோ மங்கி” (Hello Monkey) என அவர் கூறிய அடுத்த நொடி, அமைதியாக இருந்த குரங்கு திடீரென ஆக்ரோஷமாக அவர் மீது பாய்ந்தது.

இதனால் நிலைகுலைந்த அந்தப் பெண், அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். “வனவிலங்குகளிடம் விளையாட்டு வேண்டாம்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து எச்சரித்து வருகின்றனர்.