இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய போதிலும், அடுத்தடுத்த தொடர்களில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியதால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றத்தை மனதளவில் கடந்து வந்த ஜெய்ஸ்வால், தற்போது தனது கவனத்தைத் திசைதிருப்பி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நேரில் கண்டு மகிழ்ந்த அவர், அதனைத் தனது வாழ்நாள் விருப்பங்களில் ஒன்றாகக் கருதுகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஃபா உலகக்கோப்பை போட்டியை ரசிப்பதைப் பகிர்ந்துள்ள ஜெய்ஸ்வால், அந்த வீடியோவிற்கு ‘பக்கெட் லிஸ்ட் டன்’ என்று தலைப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸியின் ஜெர்சியை அணிந்து ஜெய்ஸ்வால் ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
View this post on Instagram
“>
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 2,535 ரன்களையும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 285 மற்றும் 723 ரன்களையும் குவித்துள்ள ஜெய்ஸ்வால், ஐபிஎல் அரங்கிலும் 82 போட்டிகளில் 2,593 ரன்களை எடுத்து தனது அதிரடித் திறமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
