பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை விளையாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, மக்கள் பிரார்த்தனை செய்வதை விடுத்து வேறு ஒரு காரணத்திற்காக வைரலாகத் தொடங்கியது. அந்தப் படத்தில் பாசித் அலி கண்கள் மூடிய நிலையில் படுத்திருந்தாலும், அவரது கையில் இருக்கும் மொபைல் போனின் திரை (Screen) எறிந்து கொண்டிருப்பதை இணையவாசிகள் கவனித்தனர்.

அவர் போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த போதே, புகைப்படத்திற்காக அவசர அவசரமாகக் கண்களை மூடியது போல அவரது கட்டைவிரல் அமைந்திருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒருவரின் கையில் எரியும் நிலையில் போன் இருப்பது பலருக்குச் சந்தேகத்தையும், அதே வேளையில் வேடிக்கையான உணர்வையும் ஏற்படுத்தியது.

பாசித் அலி வேண்டுமென்றே இப்படிப் புகைப்படம் எடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அவர் மீது தவறு சொல்வது சரியாக இருக்காது. இருப்பினும், அவர் உடல்நலக் குறைவோடு இருக்கும்போது இதுபோன்ற புகைப்படத்தைப் எடுத்து பகிர்ந்த நபரின் செயலையே இணையவாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Our beloved Basit ali is going through angioplasty we wish him successful procedure and speedy recovery…please keep him in your thoughts and prayers 🙏 pic.twitter.com/vkUoaTF8Sh

— Najeeb ul Hasnain (@ImNajeebH) August 17, 2026

“>

தற்போது 55 வயதான பாசித் அலி தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தாலும், வைரலான அந்த விசித்திரமான புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.