ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற 22 தீர்த்தக் கிணறுகளில் முன்னர் நடைபெற்று வந்த மறைமுக லஞ்ச முறைகள் முற்றிலாகவும் ஒழிக்கப்பட்டு, தற்போது முறையான கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் 22 தீர்த்தக் கிணறுகளின் அருகில் சிலர் தனிப்பட்ட முறையில் நின்று கொண்டு, பக்தர்களிடம் பேசி சில நூறுகள் முதல் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு தண்ணீர் ஊற்றும் முறைகேடு நிலவி வந்தது. இது பக்தர்களுக்கு ஒருவித சங்கடத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வந்தது.
தற்போது அந்த நிலை மாறி, வெளிப்படையான முறையில் வெறும் 25 ரூபாய் மட்டுமே அதிகாரப்பூர்வ கட்டணமாக அறிவிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதனால் முறையற்ற பணப் பரிமாற்றங்களும் பேரம் பேசும் படலமும் முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. வாளியைக் கையில் பிடித்துக் கொண்டு பணத்திற்குக் காத்திருக்கும் வீணான காலதாமதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதால், தற்போது பக்தர்கள் நீண்ட நேரம் நிற்காமல் மிக விரைவாகவும் எளிதாகவும் தீர்த்தமாடிச் செல்ல முடிகிறது. வரிசைகளும் தங்குதடையின்றி வேகமாக நகர்கின்றன.
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
உறவினர்கள் ராமேஸ்வரம் போயிருந்தார்கள். முன்பு நானும் போயிருக்கிறேன். முன்பெல்லாம் ராமேஸ்வரத்தில் நாழிக்கிணறுகளில் ஒருவர் நின்று கொண்டு இருப்பார். அவர்தான் கிணற்றில் இருந்து நீர் எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலையில் ஊற்றி விடுவார்.… pic.twitter.com/lvWMTmOMJX
— Subathra Devi (@SubathraDevi_) August 18, 2026
“>
கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருவதுடன், அரசியல் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
