நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவின்போது தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய முதல் உரையில், ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு சாதனை குறித்துப் பேசாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும், அமைச்சரவை மாற்றத்தில் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கோட்டை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்முறையாகக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் விஜய் 12 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் ஊழலற்ற நிர்வாகம், விவசாயிகளுக்கான ரூ.134 கோடி சிறப்புத் தொகுப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மற்றும் தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட 100 நாள் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு விமரிசையாக அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீட்டுச் சாதனையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. அரசு சார்பில் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்த்த பெருமைக்குரிய இந்தத் திட்டம் முதல்வரின் சுதந்திர தின உரையில் விடுபட்டது தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இது முதல்வரின் கவனக்குறைவா அல்லது தனக்கு எதிராக அதிகாரிகள் ஏதேனும் சதி செய்கிறார்களா என்ற கவலையில் அவர் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், அதில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

“>

 

தொழில் துறை போன்ற மிக முக்கியமான மற்றும் சவாலான துறையைக் கையாள்வதில் அமைச்சர் கீர்த்தனா தடுமாறுவதாக முதல்வர் விஜய் கருதுவதாகவும், இதன் காரணமாக அவரது முகாம் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.