கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அருகே, காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இளம் பெண் ஒருவர் பாழடைந்த கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சித்ரதுர்கா தாலுகாவில் உள்ள காரினாபாளையனஹட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமலதா என்பவரும், அவரது உறவினரான கஜேந்திரா என்ற மேய்ப்பரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை சுமலதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார். வியாழக்கிழமை இரவோடு இரவோடு சொந்தக்காரர்கள் உதவியுடன் ந.மகாதேவபுரா கிராமத்திற்குச் சென்ற அவர்கள், வெள்ளிக்கிழமை மதியம் ராமசாகரா அருகே உள்ள ஈஸ்வரநாதிஹிப்பே கோயிலில் வைத்துத் திருமணம் செய்துகொண்டனர். அதற்கான புகைப்படங்களையும் சுமலதாவின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பின் ஆட்டுத் கொட்டகைக்குத் திரும்பிய சுமலதா, இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில், சனிக்கிழியன்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சுமலதாவின் சடலம் மீட்கப்பட்டது.

“>

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பந்தாரு நேரில் ஆய்வு செய்தார். இந்த வழக்கு மொகலகல்முரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.