மும்பை அருகே, அதிவேகமாக வந்த எஸ்யூவி வாகனம் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த நான்கு பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் சம்பவம் திங்கள்கிழமை மாலை நடந்துள்ளது.

அப்பகுதியில் சென்ற மற்றொரு காரின் டேஷ்கேமில் (Dashcam) இந்த விபத்து காட்சி துல்லியமாகப் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாலையோரம் நின்றுகொண்டிருந்த நபர்களை நோக்கி வெள்ளை நிற மஹிந்திரா எஸ்யூவி கார் திடீரென அதிவேகமாகப் பாய்ந்து வந்தது. கார் மோத வந்த நொடியில், ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். மற்றொருவர் தப்பிப்பதற்காக அருகிலிருந்த சாக்கடை வடிகாலுக்குள் குதித்தார்.

கார் நூலிழையில் கடந்து சென்றதால் நான்கு பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ஆனால், காரை ஓட்டி வந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Gems of Mira Bhayandar (@gemsofmbmc)

“>

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனரா அல்லது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், வைரலாகும் டேஷ்கேம் வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.