தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட புதிய பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் இல்லாமல், உடனடியாகச் செயற்குடிவில் கொண்டுவரப்பட்டு விவசாயிகளைச் சென்றடையத் தொடங்கியுள்ளது விவசாய வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வெறும் 6 நாட்களே ஆன நிலையில், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் புதிய திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் காய்கறிச் சாகுபடியை மேம்படுத்தும் நோக்கில், பந்தல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,20,000 மானியமாக வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

“>

 

வெறும் வார்த்தைகளால் இல்லாமல், திட்டங்களை உடனுக்குடன் களத்திற்குக் கொண்டு சேர்த்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான இந்த அதிரடி நடவடிக்கைக்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சாதகமான மாற்றங்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.