விரைவான டெலிவரி சேவை மூலம் பிரபலமான Zepto நிறுவனம், எடையில் முறைகேடு செய்வதாகவும், வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபடுவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Zepto செயலி மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட பொருட்களைச் சோதித்தபோது, குறிப்பிட்ட எடையை விடக் குறைவாகவே பொருட்கள் வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 1 கிலோ எடையில் ஆர்டர் செய்யப்பட்ட வெங்காயம் வெறும் 820 கிராம்களே இருந்துள்ளது. வாடிக்கையாளர்களை ஏமாற்றி கூடுதல் லாபம் ஈட்டும் நோக்கில் டெலிவரி ஊழியர்கள் அல்லது நிறுவனத்தின் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக இது போன்ற முறைகேடுகள் அரங்கேறி வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் Zepto நிறுவனத்தை மக்கள் புறக்கணிக்க நேரிடும் என்றும், ஊழியர்களின் நேர்மையின்மையால் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

“>

 

வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதோடு, தரமான மற்றும் நம்பகமான ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தினால் மட்டுமே இந்நிறுவனம் சந்தையில் தொடர்ந்து நிலைத்து நின்று வளர்ச்சி காண முடியும் என நுகர்வோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.