தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக காப்பீடு தொகை அதாவது இலவச மருத்துவத்திற்கான காப்பீடு தொகை 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தொகுதி பணிகளை செய்வதற்கு வசதியாக எம்எல்ஏக்களுக்கு கார், ஒரு உதவியாளர் மற்றும் மாதம் 75 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அனைத்து எம்எல்ஏக்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ள நிலையில் ஒவ்வொருவராக தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பாமக எம்எல்ஏ கணேஷ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் தருவீர்களா அல்லது முதல் முறை எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் கார் தருவீர்களா என்று சந்தேகம் எழுப்பிய நிலையில் அனைவருக்கும் உண்டு என சபாநாயகர் தெளிவு படுத்தினார்.

அதன் பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏ சண்முகம் கொடுக்கிற காரை இனோவா காரா கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் என்னிடம் 3,4 கார் இருக்கு ஆனால் முதலமைச்சர் கொடுத்த கார் என்றால் அதில் ஒரு தனி பெருமை தான் அந்த காரில் தொகுதிக்கு சென்றாலே கெத்தாக இருக்கும் என்றார்.

 

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் எம்எல்ஏ சபரி அய்யங்கரன் என்பவர் சட்டசபையில் பேசிய போது முதலமைச்சர் விஜய் அவரை திரும்பி திரும்பி பார்த்தது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சட்டப்பேரவைக்கு ஒவ்வொரு முறையும் ரயிலில் தான் தான் வருவதாகவும் அதன் பிறகு ஆட்டோ பிடித்து சட்டசபைக்கு வருவதாகவும் கூறினார். அப்போது அங்கிருக்கும் காவலர்கள் நீங்கள் யார் என்று கேட்ட நிலையில் எம்எல்ஏ என்று கூறினாலும் நம்ப மாட்டார்களாம்.

ஐடி கார்டு எடுத்துக்காட்டினாலும் எம்எல்ஏ என்று நம்ப மாட்டார்கள் என்று அவர் கூறிய நிலையில் கார் கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்தார். மேலும் காலேஜ் படிக்கும் போது தனக்கு காதல் தோல்வி என்றும் அப்போது தனக்கு ஒரு வேலை கூட இல்லை என்றும் அவர் கூறிய நிலையில் தனக்கு தற்போது ஒரு நல்ல வேலையும் கொடுத்து காரையும் கொடுத்த முதலமைச்சர்  விஜய்க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக உணர்ச்சி பொங்க கூறினார்