தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் காலையிலேயே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஆவின் பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு மூன்று ரூபாய் வரையில் உயர்த்திய நிலையில் இலவச காப்பீடு திட்டம் 5 லட்ச ரூபாயிலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அதன் பிறகு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். விசிக எம்எல்ஏ ஜோதி மணியின் கோரிக்கையை ஏற்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், ஒரு உதவியாளர் மற்றும் மாதம் பராமரிப்பு தொகையாக 75 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டதும் அனைத்து எம்எல்ஏக்களும் உற்சாகத்தில் மேசையில் தட்டினர்.
#WATCH | அனைத்து MLA-வுக்கும் கார்.. தவறாக புரிந்துகொண்ட பாமக எம்.எல்.ஏ. கணேஷ்#SunNews | #TNAssembly | #TVKVijay | #PMK pic.twitter.com/MSr6TURlp5
— Sun News (@sunnewstamil) August 19, 2026
அப்போது எழுந்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ் அனைத்து எம்.எல்.ஏக்களும் கார் கொடுப்பீர்களா இல்லை எனில் முதல் முறை தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் கார்கொடுப்பீர்களா என்று கேட்டார். அதாவது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் தவறுதலாக புரிந்து கொண்டுள்ள நிலையில் முதல் முறையாக வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் தான் வழங்குவார்கள் என்று நினைத்து கேட்டார்.
அவர் அவ்வாறு கேட்டதும் சௌமியா அன்புமணி விழுந்து விழுந்து சிரிக்க முதலமைச்சர் விஜயும் சிரித்துவிட்டார். மேலும் உடனடியாக சபாநாயகர் தலையிட்டு முதல்முறைய எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தொகுதி எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று உறுதிப்படுத்தினார்
