சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பரவி வந்தாலும், சில தருணங்கள் மட்டுமே மக்களின் இதயங்களை ஆழமாகத் தொட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறுகின்றன. அந்த வகையில், பிரபல சமூக ஊடகப் பிரபலமும் இன்ஃப்ளூயன்ஸருமான பெக்கா ப்ளூம் தனது பெற்றோரின் திருமணச் நாள் நினைவாக அவர்களுக்கு அளித்த அசாத்தியமான பரிசு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் தங்களை வளர்த்து ஆளாக்கத் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகம் செய்த பெற்றோருக்கு, தங்களால் இயன்ற மிகச்சிறந்த பரிசைக் கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பிள்ளையின் கனவாகும். அந்தப் பெருங்கனவை நனவாக்கும் வகையில், பெக்கா ப்ளூம் தனது பெற்றோருக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தையே பரிசாக வழங்கி ஒட்டுமொத்த இணைய உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனது பெற்றோருக்கு இந்த அதிநவீனப் பரிசைக் கையளித்த அந்த நெகிழ்ச்சியான தருணத்தை அவர் வீடியோவாகப் பதிவு செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தங்களுக்குக் கிடைத்த இந்த பிரம்மாண்டமான பரிசைக் கண்டு திகைத்துப்போன பெற்றோரின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரும், அவர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ந்த பெக்கா ப்ளூமின் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் காண்போரின் நெஞ்சத்தை நெகிழச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.

சாதாரண மனிதர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் தனியார் ஜெட் விமானத்தை, தனது உழைப்பால் ஈட்டிய பணத்தைக் கொண்டு பெற்றோருக்குப் பரிசளித்த அவரது இந்தச் செயல், பெற்றோர் மீது அவர் வைத்துள்ள எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் பறைசாற்றுகிறது.

இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது. “பெற்றோரின் தியாகத்திற்கு பிள்ளைகள் கொடுக்கும் மிகச்சிறந்த மரியாதைக்கு இதுவே சான்று” என்றும், “பிள்ளைகள் தங்களது உழைப்பால் உயர்ந்து பெற்றோரைக் கொண்டாடும் அழகே தனி” என்றும் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆடம்பரமான பரிசு என்பதைத் தாண்டி, பெற்றோர் மீது காட்டிய அந்த ஆழமான பாச உணர்வே இந்த வீடியோவை உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகளின் மனங்களில் பிரத்யேக இடத்தைப் பிடிக்க வைத்து டிரெண்டாக்கியுள்ளது.

“>