புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் மச்சிவாடி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது நண்பரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.