வீடு கட்டுவதற்கு 1.60 லட்சம் மத்திய அரசு தருது. நாங்க 6.50 லட்சம் தருகின்றோம். மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகின்ற அரசு என ஸ்டாலின் சொல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா,
ஸ்டாலினுக்கு வக்கீலாக நீங்க மாறாதீங்க. அவர் கேள்வி கேட்கட்டும். அவர் கேட்கிற கேள்வி அறிவற்ற கேள்வி என சொல்லுறேன். ஏன்னா 2.80 லட்சம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாக்கு…. இவரு எங்க இருந்து 6 லட்சம் கொடுக்குறேன்னு சொல்லுறீங்க.
கூடுதலாக 6 லட்சம் போட்டு எங்க கட்டி இருக்கீங்க ? காட்டுங்க… ஒரு வீடு காட்டுங்க... அதாவது பொய் சொல்ற….பித்தலாட்ட போர்வழிகள்… ஆரியர்கள் படையெடுப்பு பற்றியோ, ஆரிய – திராவிட இனவாதம் பற்றியோ, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தெளிவா சொல்லி இருக்காங்க. இது என்னுடைய வார்த்தை அல்ல, டாக்டர் அம்பேத்கர் அவர்களோட வார்த்தை. ஆக உன் அடிப்படை சித்தாந்தமே பொய் , புளுகு , பிராடு.. ஆக அந்த மாதிரியான ஒரு கட்சி, ஒரு முதலமைச்சர் பேசுகிறார்.
இன்னைக்கு 5 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் கொடுக்கிறது யாரு? 100% சென்ட்ரல் கவர்ன்மெண்ட். அதைப்பத்தி கேள்வியே இல்ல… பத்திரிக்கையாளர்கள் விவரம் தெரிஞ்சு கேள்வி கேட்டீங்கன்னா, நான் பாராட்டுவேன். நீங்களே ஒரு சார்பா பொய்களை கேட்டிங்கனா…. அதாவது சென்ட்ரல் வேர் ஹவுஸ் மூலமா, சென்ட்ரல் ஃபுட் மினிஸ்டரி தான், ஸ்டேட்மென்ட் ஆப் சுப்ரீம் கோர்ட், அதை யாராவது தப்பு சொல்ல முடியுமா ?
ஒரு ஜட்ஜ்மெண்டுக்கு உள்நோக்கம் கற்பித்தால் தான் தப்பு… ஜட்ஜ்மெண்ட் விதிவிலக்கு என்று சொன்னால் தப்பில்லை… அதனால SBI டைம் கேட்டால் மாண்புமிகு பிரதமர் கேட்டார் என அர்த்தமா ? அது அது சுய நிர்வாகத்தில் உள்ளது. இன்னிக்கு அமைச்சர் நிர்மலாஜி அவர்கள் சொல்லி இருக்காங்க.. அத பத்தி பேசுறதா ? இல்ல திமுகவின் உடைய புளுகு பத்தி பேசுறதா ? ஒரு ஸ்டேட்டில்ல வெறும் 39 சீட்டில் நிற்கிற கட்சி 690 கோடி வாங்கி இருக்குன்னா….
எப்படி வாங்கி இருக்கு என சொல்லுங்க ? திமுக 11% பிஜேபி வாங்குனதுல வாங்கி இருக்கு… நீங்க 11% சீட்ல நிக்கிறீங்களா ? டிஎம்கே வின் உடைய பிராபகன்ட் ஆப் மிஷின்களா ஊடகங்களே அப்படித்தான் இருக்கு. ஏன்னா இந்த ஜாபர் ஜாதிக் விஷயம் எங்கேயாவது ஊடகத்தில் டிஸ்கஷன்ல வந்ததா ?விவாதம் நிகழ்ச்சியில் வந்ததா ? எல்லாரும் அறிவாலயத்தில் சரண்டர் ஆகிட்டீங்க என கோவப்பட்டார்.