ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் கடைக்காரர் ஒருவர், பெண் வாடிக்கையாளரை அவரது அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தப் பெண் பீர் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றபோது, கடைக்காரர் தன்னை ரகசியமாகப் படம் பிடிப்பதை நேரில் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகக் கடைக்காரரை நோக்கிச் சென்று, ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று தைரியமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“>

இந்தத் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் வீடியோவில், அந்தப் பெண் கேள்வி கேட்கும்போது கடைக்காரர் சிரித்தபடி நிற்பதும் பதிவாகியுள்ளது. தான் செய்த தவறு வெளியில் தெரிந்ததும் பயந்துபோன அந்த கடைக்காரர், வாய்மொழியாக மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, உடனடியாக அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முயன்றார்.

மேலும், அந்தப் பெண் கடையை விட்டு வெளியேற முயன்றபோதும், அவர் பின்னாடியே சென்று பதற்றத்துடன் மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பேசிய அந்தப் பெண், இந்தத் துயரமான நிகழ்வு தன்னை உலுக்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மாட்டி விழுந்த பிறகுதான் இந்த கடைக்காரர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார் என்றும், மாட்டிக்கொள்ளவில்லை என்றால் அவரது குணம் மாறியிருக்காது என்றும் இணையவாசிகள் பலர் இந்த வீடியோவிற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.