சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் தான் இணைந்தது குறித்தும், தனது அதிரடி ஆட்டத்திற்குத் தல தோனி கொடுத்த தைரியமே காரணம் என்றும் சிவம் துபே நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

​இதுகுறித்து பேசிய சிவம் துபே, “நான் முதன்முதலில் CSK டீமுக்கு வந்தபோது, ‘ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய வந்தால் ரெண்டாவது யோசனையே வேண்டாம், பந்தை தூக்கி சிக்ஸருக்கு அடி. ஒருவேளை அவுட் ஆனாலும் பரவாயில்லை, அதை நான் பார்த்துக்கிறேன்’ என்று தோனி பாய் மிகத் தெளிவாகக் கூறினார்” எனத் தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “தோனி பாய் எனக்குக் கொடுத்த அந்த ஒரே ஒரு வார்த்தையும், அந்தப் பெரிய கான்பிடன்ஸும்தான் என்னை ஒரு மிகச்சிறந்த பவர்-ஹிட்டராக (Power-Hitter) மாற்றியது” என்று தோனியின் வழிகாட்டுதலைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

​தல தோனியின் இந்த ஒரு வார்த்தை தான் சிவம் துபேவை ஐபிஎல் தொடரில் எதிரணி ஸ்பின்னர்களை பயமின்றி எதிர்கொள்ளும் அதிரடி வீரராக உருவாக்கியுள்ளது என்ற தகவல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.