தான் 300 ஆண்டுகள் பழமையான ஒரு கடற்கொள்ளையர் ஆவியைத் திருமணம் செய்திருப்பதாகவும், அந்த ஆவி மிகவும் காதல் உணர்வு மிக்கதாக இருந்து ஒவ்வொரு இரவும் தன்னைக் காதலிக்க வருவதாகவும் தொழில்ரீதியாகக் குறிசொல்லும் பெண்ணான அமண்டா டீக் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள விசித்திரமான திருமணக் கூற்று நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ‘

அமண்டா, என்ற பெண் கடந்த 2016-ல் “ஜாக்” என்ற ஹைட்டிய கடற்கொள்ளையனின் ஆவியோடு ஆன்மீகத் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களின் உறவு முற்றிலும் திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சித் தகவலை உடைத்துள்ளார்.

ஒரு குறிசொல்பவரின் உதவியுடன் வெள்ளை உடை அணிந்து, சிறப்புத் தாந்திரீக சடங்குகள் மூலம் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ள அவர், தன் ஆவி கணவர் தன் மீது அதிகப் பொறாமை கொண்டு மற்ற ஆண்களைச் சந்திக்கக் கூடாது எனத் தடுத்ததாகவும், இடையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் தாங்கள் விவாகரத்து செய்து கொண்டு பின்னர் மீண்டும் இணைந்ததாகவும் விவரித்துள்ளார்.

இந்த விசித்திரமான காதலின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சிலர் இதை வெறும் பைத்தியக்காரத்தனம் மற்றும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி என்று கூறினாலும், மற்றவர்கள் இது ஆன்மீக அன்பின் ஒரு அரிய எடுத்துக்காட்டு எனக் கமெண்ட்டுகளில் இரு பிரிவுகளாகப் பிரிந்து தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by VICE (@vice)

“>