வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது மௌரியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மாஸ் வேலைவாய்ப்பு உத்தி குறித்த செய்தி சோசியல் மீடியாவில் பயங்கர டிரெண்டாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வேலை தேடுபவர்கள் முதலில் தாங்கள் விரும்பும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் வேலை விவரங்களைச் சாட்ஜிபிடி மூலம் பகுப்பாய்வு செய்து, அந்த வேலைக்குத் தேவையான ஒரு புராஜெக்ட் திட்டத்தை உருவாக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
“>
கோடிங் மற்றும் தொழில்நுட்ப அறிவு அதிகம் இல்லாவிட்டாலும், Emergent.sh போன்ற ஏஐ தளங்கள் மூலம் வேலை செய்யும் புரோட்டோடைப்பை எளிதாக உருவாக்கி, அதை ஒரு சிறிய வீடியோ டூராக மாற்றி லிங்க்ட்இன் பக்கத்திலும், நேரடியாக அந்த நிறுவனத்தின் எச்ஆர் மேனேஜருக்கும் அனுப்ப வேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்தத் தனித்துவமான உத்தி மூலம், நாம் வெறும் ரெஸ்யூமோடு நிற்காமல், நிறுவனத்தின் தேவையைத் தீர்க்கும் திறமை நமக்கு இருப்பதை நேர்காணலுக்கு முன்பே நிரூபிக்க முடியும் என்றும், நவீன வேலைவாய்ப்புச் சந்தையில் ரிமோட் வேலைகளையும், அசுரத்தனமான சம்பள உயர்வையும் பெற இதுவே மிகச்சிறந்த வழி என்றும் அவர் பகிர்ந்துள்ள டிப்ஸ் தற்போது இணையத்தில் மில்லியன்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
