நடுத்தர மக்களின் பிடித்தமான ஷாப்பிங் தலமாக விளங்கும் டிமார்ட்டில் எப்போதுமே வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பொருள்களை வாங்குவதிலும் பில் செலுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, வார இறுதி நாள்களைத் தவிர்த்துவிட்டு, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை உள்ள நாள்களில் செல்வது ஷாப்பிங்கை மிகவும் சுலபமாக்கும்.
டிமார்ட்டில் நாளுக்கு நாள் மற்றும் வாரத்திற்கு வாரம் ஆஃபர்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை விற்பனை முடிந்த பிறகு திங்கட்கிழமையன்று கூடுதலான சலுகைகள் மற்றும் சிறப்புத் தள்ளுபடிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும், மாநிலங்கள் மற்றும் கிளைகளைப் பொறுத்து இந்தச் சலுகைகளில் மாறுதல்கள் இருக்கலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நேரடி ஷாப்பிங்கிற்குச் செல்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியைப் பயன்படுத்தி விலைப்பட்டியலைச் சரிபார்ப்பது புத்திசாலித்தனமானது. சில நேரங்களில் கடைகளை விட ஆன்லைன் செயலியில் கூடுதல் தள்ளுபடிகளும் கூப்பன்களும் கிடைக்கக்கூடும். மேலும், கூட்ட நெரிசலைக் தவிர்க்க மதிய நேரங்களையோ அல்லது மாதத்தின் நடுப்பகுதியையோ (10 முதல் 25ஆம் தேதிக்குள்) தேர்ந்தெடுத்துச் செல்வது பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும்.
