அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று பாதிப்பு மிகத் தீவிரமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்பொழுது 135 ஆக உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கோழிக்கோடு மாவட்டத்தில் மேலும் புதிதாக மூன்று பேருக்கு இந்த ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இப்படித் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால், கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் தற்பொழுது தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, சுகாதாரத் துறையினர் மிகத் தீவிரமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலமாக எளிதில் பரவக்கூடிய இந்த பாக்டீரியா தொற்று காரணமாக எல்லையோர மாவட்டங்களிலும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிர்ச்சித் தகவல் சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.