மத்திய பிரதேசத்தில் காதல் முக்கோணப் பிரச்சினையால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவரது காதலனாலேயே மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் 24 வயது இளைஞன் ஒருவன், தன்னை விட மூத்தவரான 30 வயது பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த உறவின் மூலம் அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். இதற்கிடையில், அந்த இளைஞனுக்குப் புதியதாக வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. புதிய காதலி கிடைத்தவுடன், கர்ப்பமாக இருந்த தனது முதல் காதலியைத் தன் வழியிலிருந்து நிரந்தரமாக நீக்க அந்த இளைஞன் முடிவு செய்தான்.
இதையடுத்து, அந்த இளைஞன் தனது புதிய காதலியின் உதவியுடன் முதல் காதலியைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தான். மண்வெட்டியால் அந்தப் பெண்ணின் தலையைத் தாக்கி, சிதைத்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
இந்த வழக்கில் துப்பு துலக்குவது போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்த நிலையில், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கிழிந்த பேருந்து டிக்கெட்டின் உதவியோடு போலீசார் கொலையாளிகளைக் கண்டுபிடித்தனர். தற்போது இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்ட காதலன் மற்றும் அவனது புதிய காதலி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
