டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சில குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடி குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது கருத்தை வீடியோ மூலம் பதிவு செய்தார்.

அந்த வீடியோவில், குழந்தைகள் செய்த தவறை தண்டனையின் மூலம் அணுகுவதற்கு பதிலாக, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இளம் மனங்கள் தவறான புரிதலால் பாதிக்கப்படலாம் என்றும், அவர்களை நல்வழிப்படுத்துவது சமூகத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

“வார்த்தைகளால் ஏற்படும் காயங்களுக்கு பதில் வெறுப்பு அல்ல; புரிதலும் வழிகாட்டுதலும் தேவை” என்ற கருத்தை வலியுறுத்திய பிரதமர், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த விவகாரத்தில் பழிவாங்கும் எண்ணத்தை விட மன்னிப்பு மற்றும் நல்ல பாதையை காட்டும் அணுகுமுறை முக்கியம் என பிரதமர் மோடியின் கருத்து அமைந்துள்ளது. அவரது இந்த வேண்டுகோள் அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.