சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ஆச்சரியமான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ஆடுகள் புல் மற்றும் இலை தழைகளையே உணவாக உட்கொள்ளும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள ஒரு ஆடு மிகவும் ஆவலோடு மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகிறது. இந்த வீடியோவை அந்த ஆட்டின் உரிமையாளரே சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தன் ஆட்டிற்குப் பச்சைக் புற்கள் மற்றும் இலைகள் மீது சற்றும் விருப்பமில்லை என்றும், கடந்த சில மாதங்களாக அது அசைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் எப்போதெல்லாம் பிரியாணி சமைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ஆடு ஓடிவந்து தன் தட்டிற்காகக் காத்திருக்குமாம்.
See this Instagram video by @razababa91 https://t.co/V2gGcWEY7e
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்படைந்து, “இது ஆடா அல்லது சிங்கமா?” என்று வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பலருக்கும் வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தாலும், கால்நடை மருத்துவர்கள் இது குறித்து தங்களின் கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் இயற்கையிலேயே ஆடுகள் தாவர உண்ணிகள் என்றும், அவற்றின் செரிமான மண்டலம் புல், செடி மற்றும் இலைகளை மட்டுமே செரிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். ஆடுகளுக்கு இதுபோன்ற அசைவ உணவுகளைத் தொடர்ந்து வழங்குவது அவற்றின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும்.
