தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் இளையராஜா ஆகிய நான்கு பேருக்கும் தற்பொழுது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ (CBI) மிகத் தீவிரமாக விசாரித்து வரும் இந்த முக்கியக் கொலை வழக்கில், தங்களுக்குக் கைது பயம் இருந்ததால் இந்த நான்கு போலீஸ் அதிகாரிகளும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு மட்டுமில்லாமல், சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு இந்த நான்கு பேரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் மிகவும் கறாராகக் குறிப்பிட்டுள்ளது.
தென்மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய காவலாளி கொலை வழக்கில், சஸ்பெண்ட் ஆன டாப் போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள இந்த அதிரடித் தகவல் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
