தமிழக அரசின் வெள்ளை அறிக்கை விவகாரம் தொடர்பாகப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத்தின் நிதிநிலை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “அரசாங்கம் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் என்று சொல்லியிருக்கிறார்கள்; பாஜக ஆளும் மாநிலங்களில் உபரி பட்ஜெட்டைக் காட்ட முடிகிறது, ஆனால் தமிழகத்தால் ஏன் அது முடியவில்ல?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வருவாய் ஆதாரங்கள் குறித்த சந்தேகங்களையும் அவர் கிளப்பியுள்ளார்.
பெண்களுக்கான உதவித்தொகை முதல் விவசாயிகளுக்கான மானியம் வரை அரசு அளித்துள்ள வாக்குறுதிகளைச் செயல்படுத்தத் தோராயமாக 1 லட்சத்து 338 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ள அவர், அந்த நிதியை அரசு எங்கிருந்து திரட்டப்போகிறது என்று வினா எழுப்பியுள்ளார். “வெள்ளை அறிக்கை என்பது திட்டங்களைச் செயல்படுத்தத் தயங்கும் அரசாங்கத்தின் ஒரு சாக்குப்போக்காக இருக்கக்கூடாது” என்று அவர் தமிழக அரசை எச்சரித்துள்ளார்.
