தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து திமுக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “தவெக அரசின் இந்த வெள்ளை அறிக்கையை ஒரு ‘எஸ்கேப்பிசம்’ என்றே சொல்லலாம்; தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் திராணியில்லாமல், அதை மூடிமறைக்கவே இத்தகைய தந்திரத்தை கையாள்கிறார்கள்” என்று சாடியுள்ளார். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

​ஆட்சியின் தோல்விகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவே வெள்ளை அறிக்கையைப் பார்க்கிறேன் என்று தங்கம் தென்னரசு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். “வாக்குறுதிகளைச் சொல்லும்போது இருந்த வேகம், ஆட்சியில் அமர்ந்த பிறகு எங்கே போனது? தங்களின் இயலாமையை மறைக்க இப்படி ஒவ்வொரு பொய்யான அறிக்கைகளைத் தயார் செய்வதுதான் தவெக அரசின் வேலையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தவெக அரசை அவர் வறுத்தெடுத்துள்ளார்.