சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரின் காந்திநகர் பகுதியில், ஓரினச்சேர்க்கையாளரான கணவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து மனைவியைக் கூட்டு வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, அவருக்கும் அம்பிகாபூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக ராஜஸ்தான் சென்ற கணவர், அங்கு ‘கே டேட்டிங் ஆப்’ (Gay Dating App) மூலம் அம்பிகாபூரைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் பழகி, அவருடன் நெருக்கமான ஓரினச்சேர்க்கை உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர், இருவரும் சேர்ந்து வீட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், தனது மனைவியையும் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால், கணவனும் அவனது ஆண் நண்பரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
இதனை அந்தப் பெண் கடுமையாக எதிர்த்தபோது, அவரை கொடூரமாக சித்திரவதை செய்த கணவர், தங்களது பேச்சைக் கேட்காவிட்டால் கொன்று ஆற்றில் வீசிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள கணவன் மற்றும் அவனது ஆண் நண்பரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
