இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

​அந்த வகையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்தியாவிற்குத் தனது சிறப்புச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனைகளைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

​வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட அவர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது; இந்தியாவின் அசுர வளர்ச்சியும் சாதனைகளும் உலகளவில் பெரும் பாராட்டத்தக்கவை” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

​மேலும், “இந்தியாவின் திறனும் அதன் அபார ஆற்றலும் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் புகழாரம் சூட்டியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.