போபால் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் மார்ச் 31-ஆம் தேதி இரவு ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் சிக்கிக் கொண்டார். சுமார் 5 விநாடிகள் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்ட அவர், நான்கு ஐந்து முறை சுழன்று ரயிலுக்கு அடியில் விழுந்தார்.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அந்த இளைஞர் போபாலில் உள்ள ஹமீதியா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவருக்குக் கை முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

📍Bhopal, Madhya Pradesh: On March 31 at Bhopal railway station, a guy slipped while trying to catch the Bhopal–Indore Express and fell into the gap between the train and platform, getting dragged multiple times within seconds. He was critically injured and admitted to Hamidia… pic.twitter.com/2LosNt41Dy

“>

 

இத்தகைய கவனக்குறைவான செயல்களைத் தவிர்க்குமாறு ரயில்வே நிர்வாகமும் சமூக ஆர்வலர்களும் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் காண்போரை பதற வைத்துள்ளது.