உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோரம் மயங்கிக் கிடந்த தன் தாயை எழுப்ப ஒரு சிறுவன் போராடும் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்தச் சிறுவன் கையில் தண்ணீர் மற்றும் தின்பண்டங்களுடன், அழுதுகொண்டே தன் தாய்க்கு நினைவு திரும்ப முயற்சி செய்கிறான். மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில், தேர்தல் பேனர்கள் மற்றும் வாகனங்களுக்கு நடுவே இந்தச் சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

ஆனால், அங்கிருந்த மக்கள் அந்தச் சிறுவனுக்கு உதவ முன்வராமல், தங்கள் அலைபேசிகளில் வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தது பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, உத்தரப்பிரதேச காவல்துறை இது குறித்து கான்பூர் அதிகாரிகளுக்கும் அவசர சேவை பிரிவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் தற்போதைய நிலை மற்றும் அந்தச் சிறுவனைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

“>

 

ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு உதவாமல் வேடிக்கை பார்க்கும் மனிதநேயமற்ற செயல் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்களின் பொறுப்புணர்வு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.