தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 21 வயதிற்கு குறைவான நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வரும் நபர்களின் வயது குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், ஊழியர்கள் உடனடியாக அவர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை (ID Card) கேட்டுச் சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்த வயதுடைய பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த புதிய விதிமுறையை அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் பாரபட்சமின்றி கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், இதனை மீறும் பட்சத்தில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது தற்போதைய ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
