முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தொடர்பாகப் பேசி கிளம்பிய சர்ச்சை காரணமாக, தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி அவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கி ஆணையிட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களைத் தவிர, மற்ற பிற நாட்களில் அவர் தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
