சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் நம்மை வியப்படையச் செய்வதுடன், மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றன. சமீபத்தில் துருக்கியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், 17 வயது இளைஞன் ஒருவன் 2 வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளான்.
தெருவில் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன், வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு குழந்தை கீழே விழப்போவதைக் கவனித்தான். நொடிப்பொழுதும் தாமதிக்காமல், குழந்தை கீழே விழுந்த அதே நேரத்தில் தனது கைகளை விரித்து மிகச் சரியாகப் பிடித்து, அக்குழந்தையை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டான்.
அந்த இளைஞனின் சமயோசித புத்தியாலும் தைரியத்தாலும், குழந்தைக்கு எந்தவிதக் காயமும் இன்றி உயிர் தப்பியது. இந்தச் செயலைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அனைவரும் அவனது வீரத்தைப் பாராட்டினர். சிறு வயதிலேயே பெரிய பொறுப்புணர்வுடன் செயல்பட்ட இந்த இளைஞனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
तुर्की में एक 17 वर्षीय लड़के ने खिड़की से गिर रही 2 साल की बच्ची को बचाने में कामयाबी हासिल की।। pic.twitter.com/YbEN6LT8Ir
— Dr. Sheetal yadav (@Sheetal2242) February 1, 2026
“>
“கடவுளின் கிருபையாலும் இந்த இளைஞனின் துணிச்சலாலும் ஒரு உயிர் காப்பற்றப்பட்டுள்ளது” என நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
