திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஹரிஷ்மா (15) என்பது தெரியவந்தது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரிஷ்மா காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தனர்.
தற்போது இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
